சுடச்சுட

    

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரி மகளிர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

    By ஈரோடு  |   Published on : 08th September 2015 07:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக் கோரி ஈரோட்டில் மகளிர் காங்கிரஸ் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

     ஈரோடு காளை மாடு சிலை அருகில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மகளிர் காங்கிரஸ் பொறுப்பாளர் புவனேஸ்வரி தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி, மாவட்டத் தலைவர்கள் காந்தி (தெற்கு), சரவணன் (வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெங்காயம் விலை உயர்வை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். ஆன்லைன் வர்த்தகம் மூலம் அத்தியாவசிய பொருள்கள் பதுக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

      ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜேஷ் ராஜப்பா, சுரேஷ், மண்டலத் தலைவர்கள் வினோகாந்தன், ஜெயபால், ஜாபர்சாதிக், சிறுபான்மைப் பிரிவு பொதுச்செயலர் கே.என்.பாட்சா உள்பட பலர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai