சுடச்சுட

    

    ஈளாடா தடுப்பணைக்கு செல்லும் சாலையைச் சீரமைக்க கோரிக்கை

    By dn  |   Published on : 09th September 2015 03:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோத்தகிரியை அடுத்த ஈளாடா தடுப்பணைக்கு செல்லும் சாலையைச் சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு கோத்தகிரி மக்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     கொடநாடு செல்லும் சாலையில் கோத்தகிரியின் குடிநீர் ஆதாரமாக உள்ள ஈளடா குடிநீர் தடுப்பணை உள்ளது. ஒன்னட்டி, கதஹட்டி, குயின்சோலை, பட்டக்கொரை ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் பிரதான சாலையும் இதுதான்.

     இந்தச் சாலையைச் சீரமைக்க 6 மாதங்களுக்கு முன் மாவட்ட ஆட்சியரின் விருப்ப நிதி யிலிருந்து ரூ. 10.80 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கப்பட்டன. ஆனால், துவங்கிய பணிகள் ஆரம்ப நிலையிலேயே நிறுத்தப்பட்டு விட்டன.

     குண்டும், குழியுமான இந்தச் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளி மாணவ, மாணவிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

     எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு விரைவில் சாலையைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai