சுடச்சுட

  

  உதகை அருகேயுள்ள ஏக்குணி அரசு உயர்நிலைப் பள்ளியில் ஓசோன் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

   நீலகிரி சுற்றுச்சூழல், கலாசார சேவை அறக்கட்டளை, தேசிய பசுமைப்படை ஆகியவை இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமை ஆசிரியர் ஷீலா குமாரி தலைமை வகித்தார்.

   மாவட்ட வன அலுவலர் பத்ரசாமி, சிறு தானிய விவசாயம், இயற்கை விவசாயம் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையிலான பசுமை ஊர்வலத்தை தொடங்கி வைத்துப் பேசினார். சிறு தானியங்கள் மனித உடல் இயக்கத்திற்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்தாக உள்ளது. மண்ணில் காணப்படும் தாது சத்துக்கள் உயிரோட்டத்தில் சிறு தானியங்களின் பங்கு அதிகம் என்றார்.

   தேசிய பசுமைப் படையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் பேசுகையில், ஓசோன் பாதிப்பு தாவர போர்வைகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், புற்று நோய், ஆஸ்துமா, தோல் வியாதிகள் அதிகளவில் காணப்படுகிறது. இதைத் தடுக்க மா, ஆல், துளசி போன்ற பாரம்பரிய மரங்களை பயிரிட வேண்டும் என்றார்.

   தொடர்ந்து, நெஸ்ட் அமைப்பின் நிர்வாக அறங்காவலர் சிவதாஸ், ஊராட்சித் தலைவர் முத்தன், செயல் அலுவலர் சுப்பிரமணி, பள்ளி ஆசிரியர் சுப்பிரமணி உள்ளிட்டோர் பேசினர்.

   முன்னதாக, தேசிய பசுமைப்படை பணிகளை சிறப்பாக செயல்படுத்திய மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பசுமை புத்தகப் பை, கைப்பிரதிகளும் விநியோகிக்கப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai