சுடச்சுட

  

  கூடலூரில் மின் வாரிய நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் புதன்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

   இதுதொடர்பாக, மின்வாரிய செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

   தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகத்தின் நீலகிரி மின்பகிர்மான வட்டத்தின் மேற்பார்வைப் பொறியாளர் டி.ஹால்துரை தலைமையில், கூடலூரில் டி.கே.பேட்டையில் உள்ள மின்வாரிய உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மின்வாரிய நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

   இக்கூட்டத்தில் கூடலூர், தெற்கு கூடலூர், கீழ் கூடலூர், தேவர்சோலை, மசினகுடி, பந்தலூர், சேரம்பாடி, அய்யன்கொல்லி, உப்பட்டி பிரிவு அலுவலகங்களுக்கு உள்பட்ட மின்

  நுகர்வோர் பங்கேற்று மின்விநியோகம் தொடர்பான தங்களது குறைகளுக்கு நேரில் தீர்வு

  காணலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai