சுடச்சுட

  

  கோத்தகிரியில் சோஷலிசத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கக் கூட்டம், குயின்சோலை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

   கூட்டத்துக்கு, தலைவர் கரு.வெற்றிவேல் தலைமை வகித்தார். பொதுச் செயலர் பெ.தர்மலிங்கம் முன்னிலை வகித்தார்.

   இதில், தமிழ்நாடு தேயிலைத் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களை தினசரி 50 கிலோவுக்கு மேல் தேயிலை இலைப் பறிக்க கட்டாயப்படுத்தக் கூடாது. பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய விடுப்பூதியம், மருத்துவ விடுப்பூதியம், பணிக்கொடை உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டும்.

   தேயிலைத் தோட்டத்தில் வன விலங்குகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை வேண்டும். தேயிலை ஏல மையங்களில் தேயிலைத் தூளை இடைத்தரகர்கள் சிண்டிகேட் அமைத்து மிகக் குறைந்த விலைக்கு வாங்கி பல மடங்கு லாபத்திற்கு விற்பனை செய்வதைத் தடுக்க இந்திய தேயிலை வாரியமே சந்தைப்படுத்துதல் வேண்டும்.

   டேன் டீ தொழிலாளர்கள் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளைப் பெற்றிட, பொருளாதாரப் பற்றாக்குறையால் தள்ளாடும் டான் டீக்கு தமிழக அரசு ரூ. 50 கோடி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai