சுடச்சுட

  

  நீலகிரி மாவட்டத்தில் இயக்கப்படும் ஜனதா பர்மிட் வாகனங்களுக்குத் தடை விதிக்கவேண்டும் என நீலகிரி மாவட்ட ஓட்டுநர், உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு அவர்கள் செவ்வாய்க்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: உதகை, குன்னூர் மற்றும் கோத்தகிரியில் பழைய ஜனதா பர்மிட் வாகனங்கள் (டட்ஜ்) வாடகைக்கு இயங்கி வருகின்றன. இந்தப் பழைய வாகனங்களில் தற்போதைய புதிய வாகனங்களைப் போல மாற்றியமைத்துள்ளனர். இது மோட்டார் வாகனச் சட்டத்திற்கு புறம்பானதாகும்.

  மேலும், இந்த வாகனங்கள் 40 இருக்கைகளை கொண்டிருப்பதால் 3 வாகனங்களு கக்குரிய நபர்களை இதில், ஒரே நேரத்தில் ஏற்றிச் செல்வதுடன், இவ்வாகனங்கள் எந்தவித வழித்தடங்களும் இல்லாமல் இயங்கி வருகின்றன.

  இதனால், மேக்ஸி கேப் 121 பர்மிட் வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர்.

  இதுகுறித்து, வட்டாரப் போக்குவரத்து அதிகாரியிடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

  எனவே, இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு ஜனதா பர்மிட் வாகனங்களை இயக்க தடைவிதிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai