சுடச்சுட

  

  நீலகிரியில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தினால் அபராதம்

  By dn  |   Published on : 09th September 2015 03:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நீலகிரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் எச்சரித்துள்ளார்.

   இதுதொடர்பாக, ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது:

   நீலகிரி மாவட்டத்தில் உதகை, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் நகராட்சிகள்,  அனைத்துப் பேரூராட்சிகளிலும் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பொருள்களின் உபயோகத்தை தவிர்ப்பது தொடர்பான விழிப்புணர்வை, பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளிடையே ஏற்படுத்தும் வகையில் ஒரு நாள் கள ஆய்வு, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டது.

   இதற்காக, நான்கு நகராட்சிகளுக்கு 9 குழுக்களும், அனைத்து பேரூராட்சிகளுக்கு ஒரு குழுவுமாக மொத்தம் 10 குழுக்கள் அமைக்கப்பட்டன. இக்குழுவினர் சுற்றுலா, வெளியூர் வாகனங்களை ஆய்வு செய்து பிளாஸ்டிக் பொருள்களை பறிமுதல் செய்தனர்.

   பிளாஸ்டிக் பொருள்களுக்கு பதிலாக மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்பட்டுள்ள துணிப் பைகளை விநியோகித்துள்ளனர். இந்த ஆய்வின்போது, சுமார் 43,000 கிலோ பிளாஸ்டிக் பொருள்களை கைப்பற்றி, சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ. 52,000 அபராதம் விதிக்கப்பட்டது.

   எனவே, இனிவரும் காலங்களில் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகப்படுத்துவதை தவிர்த்து, நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்க முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai