சுடச்சுட

  

  நீலகிரி மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2,180 பயனாளிகளுக்கு ரூ. 43 கோடி மதிப்பிலான பசுமை வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தெரிவித்தார்.

   இதுதொடர்பாக, ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது:

   நீலகிரி மாவட்டத்தில் தமிழக முதல்வரின் ஆணைப்படி, சூரிய ஒளியுடன் கூடிய பசுமை வீடுகள் வழங்கும் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

   இத்திட்டத்தின் கீழ், 2011-12, 2012-13 ஆம் ஆண்டுகளில் தலா 545 வீடுகள் தலா ரூ. 9.81 கோடி மதிப்பிலும், 2013-14 ஆம் ஆண்டில் 545 வீடுகள் ரூ. 11.45 கோடி மதிப்பிலும், 2014-15 ஆம் ஆண்டில் 545 வீடுகள் ரூ. 11.45 கோடி மதிப்பிலும் என இதுவரையிலும் 2,180 பயனாளிகளுக்கு ரூ. 42.51 கோடி மதிப்பிலான வீடுகள் கட்டித்தரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

   முன்னதாக, இத்திட்டத்தின் கீழ் இத்தலார் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் 30 பசுமை வீடுகளை ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai