சுடச்சுட

    

    மழையால் பயணிகள் பாதிப்பு: 3 அரசுப் பேருந்துகளின் தகுதிச் சான்று ரத்து

    By dn  |   Published on : 09th September 2015 03:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குன்னூரில் அரசுப் பேருந்துகளில் மழை நீர் உள்ளே புகுவதால்  பயணிகள் பாதிக்கப்படுவதாகக் கூறி, 3 அரசுப் பேருந்துகளின் தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டது.

     நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலான மழை பெய்து வருகிறது. மழைக் காலங்களில் அரசுப் பேருந்துகளில் மழை நீர் ஒழுகுவதால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகி வருவது குறித்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலரிடம் பயணிகள் முறையிட்டனர்.

     அதன்பேரில், செவ்வாய்க்கிழமை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் வெங்கட்ராமன் உள்ளிட்ட போக்குவரத்து அதிகாரிகள் குன்னூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

     அப்போது, குன்னூர் முதல் தூதூர்மட்டம் வழித்தடங்களில் இயங்கி வரும் 3 அரசுப் பேருந்துகளை சோதனை செய்ததில் பேருந்துகள் பழுதடைந்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்தப் பேருந்துகளின் தகுதிச் சான்று ரத்து செய்யப்பட்டன.

     மேலும், 2 சிற்றுந்துகளில் ஜன்னல் ஓரக் கண்ணாடிகள் இல்லாதது குறித்து எச்சரிக்கை விடுப்பட்டது.

    எப்சி காட்டாமல், வரி செலுத்தாமல் இயக்கப்பட்டு வந்த 4 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ரூ. 40 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

     மாவட்டம் முழுவதும் அரசுப் பேருந்து, சிற்றுந்துகளில் இதுபோல் ஆய்வு செய்து பயணிகள்

    சிரமமின்றி சென்று வர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தெரிவித்துள்ளார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai