சுடச்சுட

  

  குன்னூரை அடுத்த பாய்ஸ் கம்பெனி தூய ஆரோக்கிய அன்னை மாதா ஆலய விழா செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

  கடந்த 23-ஆம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கிய இத்திருவிழா நாள்தோறும் நவநாள் திருப்பலி, தேர் பவனி ஆகியவை நடைபெற்றன.

  ஆலய பங்கு குரு லாரன்ஸ் அல்போன்ஸ், மவுண்ட்பிளசன்ட் சகாய மாதா ஆலய குரு ஹென்றி மரிய லூயிஸ், குன்றிலூர்து அன்னை ஆலய குரு பிரான்சிஸ் சேவியர் ஆகியோர் சிறப்பு மறையுரை நடத்தினர்.

  கத்தோலிக்க மலை மாவட்ட பிஷப் அமல்ராஜ் தலைமையில் கூட்டுப் பாடல், திருப்பலி நடந்தது.  ஜோசப் பள்ளித் தாளாளர் பெரியநாயகம் தலைமையில் மாலை திருப்பலி நடந்தது.

  இதைத்தொடர்ந்து, அலங்கரிக்கப்பட்ட மின் விளக்குகளால் ஆன சப்பரத்தில் அன்னை தேர்பவனி நடந்தது. பாய்ஸ் கம்பெனி, கேட்டில் பவுண்ட், அருவங்காடு வெடிமருந்து தொழிற்சாலை குடியிருப்பு, மெயின்கேட், கோபாலபுரம் வழியாக மீண்டும் சப்பரம் ஆலயத்தை வந்தடைந்தது.

  தொடர்ந்து, நற்கருணை ஆசியுடன் விழா நிறைவடைந்தது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு குருக்கள் ராஜகுமாரன், எட்வின் சார்லஸ் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai