சுடச்சுட

  

  உதகை-பார்சன்ஸ்வேலி சாலையை சீரமைக்ககோரி தோடர் இன மக்கள், புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் உதகை தீட்டுக்கல் சந்திப்பில் அச்சங்கத்தின் தலைவர் அடையாள குட்டன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது.

  இதுகுறித்து அடையாள குட்டன் கூறியதாவது:

  உதகை-பார்சன்ஸ்வேலி வரையிலான பழங்குடியின மக்கள் வசிக்கும் கிராமங்களுக்குச் செல்லும் சாலை நீண்ட காலமாக பராமரிக்கப்படாததால் மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால், கவக்காடுமந்து, அட்டக்கொரைமந்து, மலவதிமந்து, அகநாடுமந்து, குந்தக்கோடுமந்து, ஆனக்கல்மந்து, பில்லிமந்து, பென்னப்பால்மந்து, நத்தனேரிமந்து, கல்லக்கொரைமந்து, கொள்ளிக்கோடுமந்து, மேக்கோடுமந்து, துக்கார்மந்து, கல்மந்து, பார்சன்ஸ்வேலி, கவர்னர் சோலை, அகதநாடு உள்ளிட்ட கிராம மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

  இதுதொடர்பாக அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றார்.

  இத்தகவலறிந்து வந்த அரசு அதிகாரிகள், காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், பார்சன்ஸ்வேலி சாலையை சீரமைக்க ரூ.2.2 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் இதற்கான பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, பழங்குடியின மக்கள் சாலை மறியலைக் கைவிட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai