Enable Javscript for better performance
உதகை அருகே லாரி கவிழ்ந்து 17 தொழிலாளர்கள் காயம்- Dinamani

சுடச்சுட

    

    உதகை அருகே லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 17 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.

    உதகையில் மினிக்மந்திலிருந்து, தலைக்குந்தா நோக்கி புதன்கிழமை லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை ராஜ்குமார் என்பவர் ஓட்டி வந்தார். அந்த லாரியில் 17 தொழிலாளர்கள் இருந்துள்ளனர். அந்த லாரி மஞ்சனக்கொரை அருகே வளைவில் திரும்பும் போது, கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் லாரியிலிருந்த 17 தொழிலாளர்களும் காயமடைந்தனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக உதகை அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு, முதலுதவி சிகிச்சைக்குப் பின்னர், பலத்த காயமடைந்த யாசினி(25), பிரேமா(27), ராதா(45), கோபால்(65), ராணி(47), அனுராதா(50) ஆகியோர் உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து உதகை நகர மேற்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai