சுடச்சுட

  

  காந்தி நகரில் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தல்

  By குன்னூர்  |   Published on : 10th September 2015 05:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குன்னூரை அடுத்த அருவங்காடு காந்தி நகரில் நடைபாதை புதுப்பிப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  அருவங்காடு காந்தி நகர் மக்கள் நலச் சங்கத்தின் ஆண்டுக் கூட்டம் அச்சங்கத்தின் இணைச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து சங்கத்தின் தலைவர் ஜார்ஜ் பேசினார்.

  இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

  காந்தி நகரில் குப்பை உள்ளிட்ட கழிவுகளை பொது இடங்களில் வீசக் கூடாது. இப்பகுதியில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் உள்ள ஆபத்தான சில்வர் ஓக் மரங்களை அகற்ற வேண்டும். அருவங்காடு-ஜெகதளா சாலை சீரமைப்புப் பணியை விரைவில்  தொடக்க வேண்டும். காந்தி நகர் பகுதியில் உடைந்துள்ள நடைபாதைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  சங்கப் பொருளாளர் ரங்கநாதன் வரவு, செலவு கணக்குகளைத் தாக்கல் செய்தார். சங்கத்தின் புதிய செயலராக ராமகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai