சுடச்சுட

    

    தரமற்ற தேயிலைத் தூள் உற்பத்தி செய்தால் நடவடிக்கை: தேயிலை வாரிய செயல் இயக்குநர் எச்சரிக்கை

    By குன்னூர்  |   Published on : 10th September 2015 05:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தரமற்ற தேயிலைத் தூளை உற்பத்தி செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னிந்திய தேயிலை வாரிய செயல் இயக்குநர் பால்ராசு தெரிவித்தார்.

    தென்னிந்திய தேயிலை வாரியம் சார்பில் சிறு தேயிலை விவசாயிகளுக்கான பயிற்சி முகாம், ஜெகதளாவில் புதன்கிழமை நடைபெற்றது. இம்முகாமுக்கு செயல் இயக்குநர் பால்ராசு தலைமை வகித்துப் பேசியதாவது:

    தேயிலைத் தோட்டங்களில் கத்தியைப் பயன்படுத்தக் கூடாது. தேயிலைத் தோட்டங்களை 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேல் கவாத்து செய்தால் தரமான தேயிலைகள் கிடைக்கும். உலகளவில் தேயிலை வர்த்தகம் மோசமான நிலையில் உள்ளது.

    கோத்தகிரி பகுதிகளில் ஒரு சில தேயிலைத் தொழிற்சாலைகள் தரமற்ற பசுந்தேயிலையை ரூ.4 விலை கொடுத்து வாங்கி தேயிலைத் தூளை உற்பத்தி செய்து வருகின்றனர்..  இதுபோன்ற தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    சிறுதேயிலை விவசாயிகளுக்கு 1 ஹெக்டர் தேயிலைத் தோட்டத்துக்கு ரூ.6,000, மறு நடவு செய்ய 1 ஹெக்டருக்கு ரூ.93,000, காலி இடங்களில் தேயிலை நாற்றுகளைப் புதிதாக நடவு செய்ய 1 ஹெக்டருக்கு ரூ.1.61 லட்சம், தேயிலை கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.5 லட்சம் வரை மானியமாக வழங்கப்படுகிறது என்றார்.

    இதில், தேயிலை வாரிய உதவி இயக்குநர் பகலவன், உபாசி கேவிகே வேளாண்மை விஞ்ஞானி ராமமூர்த்தி, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விஞ்ஞானி டாக்டர் செல்வராஜ் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். ஜெகதளா, காரக்கொரை, ஓதனட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai