Enable Javscript for better performance
தேனாடு ஊராட்சியில் மனுநீதி நாள் முகாம்- Dinamani

சுடச்சுட

    

    கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தேனாடு ஊராட்சியில் புதன்கிழமை மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது.

    இம்முகாமுக்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தலைமை வகித்தார். தேனாடு ஊராட்சித் தலைவர் ஸ்டீபன், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கவிதா, மகளிர் திட்ட இயக்குநர் பழனிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோத்தகிரி வட்டாட்சியர் ரவி வரவேற்றார். இதில், 41 பேருக்கு புதிய குடும்ப அட்டை, 30 பேருக்கு முதியோர் உதவித் தொகை உள்பட ரூ.46.54 லட்சத்திலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வருவாய் ஆய்வாளர்கள் நந்தினி, விஜயலட்சுமி, கிராம நிர்வாக அலுவலர்கள் மகாலிங்கம், ஜெயபாலன், ரவி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai