சுடச்சுட

  

  கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

    அவினாசிலிங்கேஸ்வரர் கோயில் அர்ச்சகர் குமரசுப்பிரமணி தலைமையில் இக்கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, மஹா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. இதில், ஒன்றியக் குழுத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

  கோயிலை அகற்றக் கோரி ஆர்ப்பாட்டம்: தந்தை பெரியார் திராவிட கழகம், விடுதலை தமிழ்ப் புலிகள் அமைப்பினர் கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள விநாயகர் கோயிலை அகற்ற வேண்டுமென வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயிலை முற்றுகையிட வந்தவர்களை காவல் துணைக் கண்காணிப்பாளர் சுப்பிரமணி தலைமையில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து சட்ட விதிகளின் படி, அரசு அலுவலக வளாகத்தில் கோயில் கட்டக்கூடாது எனக் கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட 12 பேரை போலீஸார் கைது செய்தனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai