சுடச்சுட

    

    மஞ்சூர் அருகே  பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது

    By உதகை  |   Published on : 11th September 2015 05:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மஞ்சூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்திருந்த கூண்டில் வியாழக்கிழமை சிக்கியது.

    மஞ்சூர் அருகே தொட்டகம்பை கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர் கடந்த 3 நாள்களுக்கு முன்னர் தனது தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த ஆடுகளை மேய்ச்சலுக்கு விடுவதற்காக சென்றபோது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை சுப்பிரமணியின் மீது பாய்ந்து தாக்கியுள்ளது. சுப்பிரமணியின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடி வந்ததைக் கண்ட அசிறுத்தை அருகிலிருந்த தேயிலைத் தோட்டத்துக்குள் புகுந்து விட்டது. பின்னர், ஆட்டுத் தொழுவத்திற்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த 5 ஆடுகள் இறந்து கிடந்தது தெரியவந்தது.

     இதுகுறித்து, குந்தா வனச்சரகர் அலுவலகத்துக்ககு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வனச்சரகர் ராமச்சந்திரன், வனவர் ரவி ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து சிறுத்தையை பிடிப்பதற்காக தொழுவத்திற்கு அருகில் கூண்டு வைக்கப்பட்டது.

     இந்நிலையில், வியாழக்கிழமை காலை அந்த கூண்டில் சிறுத்தை சிக்கியிருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, வனத்துறையினரும், கால்நடை மருத்துவர் மனோகரன் தலைமையிலான குழுவினரும் அங்கு விரைந்து வந்தனர்.

     அங்கு கூண்டில் சிக்கியிருந்த சிறுத்தைக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது. மயக்கமடைந்த சிறுத்தையை பரிசோதித்த மருத்துவர் மனோகரன், அதன் உடலிலிருந்த காயத்திற்கும் சிகிச்சை அளித்தார். பின்னர் அந்த சிறுத்தை  அப்பர்பவானி பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு வியாழக்கிழமை மாலை அங்குள்ள வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்டது.

     பிடிபட்ட சிறுத்தை சுமார்  ஒன்றரை வயதுள்ள பெண் சிறுத்தை எனவும், அது ஆரோக்கியமான நிலையிலேயே உள்ளதாகவும், அதன் உடலிலிருந்த காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதால் விரைவில் குணமடைந்து விடுமெனவும் கால்நடை மருத்துவர் மனோகரன் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai