சுடச்சுட

  

  ரெப்கோ வங்கி சார்பில் அரசுப் பள்ளிகளுக்கு உதவி

  By கோத்தகிரி  |   Published on : 11th September 2015 05:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோத்தகிரி ரெப்கோ வங்கி சார்பில் அரசுப் பள்ளிகளுக்கு உதவி வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

    கேர்கம்பை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கோத்தகிரி கிளை மேலாளர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். சார்பு இயக்குநர்கள் ரங்கராஜன், மகாலிங்கம், மணீஸ்வர் கணேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறங்காவலர் கண்ணன் வரவேற்றார்.

    இதில், ரெப்கோ வங்கி மேலாண்மை இயக்குநர் வரதராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கேர்கம்பை அரசு பள்ளியில் ரூ. 1 லட்சம் செலவில் வங்கி சார்பில்  அமைக்கப்பட்ட குடிநீர் கிணற்றை பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார். மேலும், 2 பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் வழங்கப்பட்டன. இதேபோல், கட்டபெட்டு மேல்நிலைப் பள்ளி, கெங்கரை அரசு பள்ளி ஆகியவற்றுக்கு பிளாஸ்டிக் குடிநீர் தொட்டிகள் வழங்கப்பட்டன. மேலும், 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai