Enable Javscript for better performance
குன்னூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    குன்னூர் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பாஜக ஆர்ப்பாட்டம்

    By குன்னூர்  |   Published on : 12th September 2015 04:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குன்னூர் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து, பாஜக சார்பில் வி.பி. தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

     ஆர்ப்பாட்டத்துக்கு, பாஜக நகரத் தலைவர் க.பாப்பண்ணன் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வர்த்தக அணி மாவட்ட துணைத் தலைவர் பாலாஜி கண்டன உரையாற்றினார்.  ஆர்ப்பாட்டத்தில், ராஜாஜி நகர், ஐயப்பன் கோயில் சாலை, வண்ணாரப்பேட்டை, டைகர்ஹில் உள்ளிட்ட பகுதியில் உள்ள பழுதடைந்த சாலைகளை புனரமைக்காததால் அவசர காலங்களில் நோயாளிகளை மருத்துவமனைக்கு கூட அழைத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

     நகராட்சிக்குச் சொந்தமான கடைகளை விற்பனை செய்யக் கூடாது. மார்க்கெட் பகுதியில் ஆளும் கட்சியினர் நகராட்சிக்குச் சொந்தமான கடைகளில் கூடுதல் கட்டடங்களை கட்டி வருவது கண்டனத்திற்குரியது. நகராட்சி நிர்வாகம் உயர்த்தவுள்ள குடிநீர் வரி கட்டணத்தை உடனே ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

     இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், கன்டோண்மென்ட் பொறுப்பாளர் ராஜேஷ்கண்ணன், ஜான்பால், குங்குமராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். குன்னூர் நகர பொதுச் செயலாளர் பத்மநாபன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai