சுடச்சுட

  

  கோவையில் இருந்து உதகைக்கு ஆசிட் ஏற்றிச் சென்ற டேங்கர் லாரியில் இருந்து வெள்ளிக்கிழமை ஆசிட் கசிந்ததால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். 

   கோவையில் இருந்து உதகைக்கு ஆசிட் ஏற்றிச் சென்ற லாரி வியாழக்கிழமை இரவு கு ன்னூர் வந்தது.

   அப்போது, வாகனத் தணிக்கையில் ஈடுபட்ட ஆய்வாளர் அருள் தலைமையிலான காவலர்கள், லாரி டிரைவர் முருகன் (44) குடிபோதையில் வாகனத்தை இயக்கியதால்  அவர் மீது வழக்குப் பதிவு செய்து லாரியை பறிமுதல் செய்தனர். டிஎஸ்பி அலுவலகம் முன்பு உள்ள சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த டேங்கர் லாரியில் இருந்து வெள்ளிக்கிழமை ஆசிட் கசிவு ஏற்பட்டு சாலையில் வழிந்தோடியது. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

   இதுகுறித்து, தகவலறிந்த குன்னூர் நகரக் காவல் ஆய்வாளர் வி.வி.சிவகுமார் அப்பகுதிக்குச் சென்று முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டார்.  இதையடுத்து, லாரி ஓட்டுநருக்கு குன்னூர் நீதிமன்றத்தில் அபராதம் விதிக்கப்பட்டது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai