சுடச்சுட

    

    மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 4.68 கோடி கடனுதவி

    By உதகை  |   Published on : 12th September 2015 04:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீலகிரி மாவட்டத்தில் 144 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 4.68 கோடி கடனுதவி வழங்கப்பட்டது.

     தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், நீலகிரி மாவட்டத்தில் உள்ள மகளிர், ஆண்கள், மாற்றுத்திறனாளி சுயஉதவிக் குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழா, மகளிர் சுயஉதவிக் குழுக்களின் குறைகேட்பு நாள் கூட்டம் ஆகியவை உதகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

     இந்நிகழ்ச்சியில், 144 சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 4.68 கோடி மதிப்பிலான கடனுதவிகளை வழங்கி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் பேசியதாவது:

     தமிழக முதல்வர் பெண்களின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதில் ஏழை மகளிரை பொருளாதாரத்தில் உயர்த்துவதற்காக கடனுதவி வழங்கும் திட்டமும் ஒன்றாகும்.

     நீலகிரி மாவட்டத்தில் நடப்பு நிதியாண்டில் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 70 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

     இதில், இதுவரை ரூ. 33.14 கோடி கடன் உதவியாக வழங்கப்பட்டுள்ளது. வங்கிகளும் சுயஉதவிக் குழுவினருக்கு அதிகளவில் கடனுதவி வழங்க முன் வர வேண்டும்.

     கடன் பெறும் சுயஉதவிக் குழுக்களும் அதன் மூலமாக தங்களது வாழ்வாதாரத்தைப் பெருக்கிக் கொள்ள வேண்டும். கடனுதவி அளித்து வரும் வங்கிகளுக்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் ஆட்சியர் குறிப்பிட்டார்.

     இதில், மகளிர் திட்ட உதவி அலுவலர் ஹென்னா டிக்சன், கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் முருகன், முன்னோடி வங்கி மேலாளர் சுந்தரபாரதி, மத்திய கூட்டுறவு வங்கிப் பொது மேலாளர் வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai