சுடச்சுட

    

    கோத்தகிரி அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த பெண்களுக்கு தமிழக அரசு அறிவித்திருந்த அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கும் விழா சனி க்கிழமை நடைபெற்றது.

     நிகழ்ச்சிக்கு, மருத்துவமனை முதன்மை மருத்துவர் நிர்மலா தலைமை வகித்தார். மருத்துவமனை ஆலோசனைக் குழு உறுப்பினர் பி.ராஜன் முன்னிலை வகித்தார். டாக்டர் பிரத்திவிராஜ் வரவேற்றார்.

     சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற பேரூராட்சித் தலைவர் சை.வாப்பு, மருத்துவமனையில் குழந்தை பெற்ற ஆஜிரா, மணிமேகலை, நான்சி, ஜமுனா, நிஷாந்தி, மெகர்பானு ஆகியோருக்கு 16 வகையான பொருள்கள் அடங்கிய குழந்தை நல பரிசுப் பெட்டகத்தை வழங்கினார். இதில், மருத்துவர்கள் காவியா, கிருஷ்ணவேணி, செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai