சுடச்சுட

  

  உதகையில் மாவட்ட அளவிலான விழிப்பு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

   நீலகிரி மக்களவை உறுப்பினர் சி.கோபாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் பி.சங்கர், மாநிலங்களவை உறுப்பினர் அர்ஜுனன், தாட்கோ தலைவர் கலைச்செல்வன், மாவட்ட ஊராட்சித் தலைவர் மேனகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   இக்கூட்டத்தில், மத்திய அரசின் நிதியுதவி திட்டங்களான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், இந்திரா நினைவுக் குடியிருப்புத் திட்டம், பிரதம மந்திரி கிராம சடக் யோஜனா திட்டம், தூய்மை பாரத இயக்கம், மக்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் ஆகிய திட்டங்களின் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில், தாட்கோ சார்பில் ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து 24 நபர்களுக்கு தலா ரூ. 10,000 வீதம் ரூ.2.4 லட்சமும், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த 3 பேருக்கு ரூ. 5.25 லட்சம் மானியத்துடன் கூடிய ரூ. 10.85 லட்சம் வங்கிக் கடனுக்கான ஆணையையும் ஆட்சியர் வழங்கினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai