சுடச்சுட

  

  உதகையில் தாய்மார்களுக்கு அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கல்

  By உதகை  |   Published on : 13th September 2015 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உதகையிலுள்ள அரசு சேட் நினைவு மகப்பேறு மருத்துவமனையில் அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகங்கள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.

   தமிழக முதல்வரின் உத்தரவின்படி அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களுக்கு 16 வகையான பொருள்கள் அடங்கிய அம்மா குழந்தை நல பரிசுப் பெட்டகம் வழங்கப்படுகிறது.

   இத்திட்டத்தின் தொடக்க விழா உதகை அரசு சேட் நினைவு மகப்பேறு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தலைமையில் நடைபெற்றது. சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் டாக்டர் பானுமதி வரவேற்றார். மாநிலங்களவை உறுப்பினர் அர்ஜுனன், மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், தாட்கோ தலைவர் கலைச்செல்வன், உதகை நகர்மன்றத் தலைவர் சத்தியபாமா, ஊராட்சித் தலைவர் சாந்தி, மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

   இதில், ஆட்சியர் பி.சங்கர் 14 தாய்மார்களுக்கு பெட்டகங்களை வழங்கினார். மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பந்தர் நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai