சுடச்சுட

  

  உதகை அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதி மாணவர்கள் தண்ணீர் கேட்டுப் போராட்டம்

  By உதகை  |   Published on : 13th September 2015 08:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  உதகை அரசு பிற்படுத்தப்பட்டோர் விடுதி மாணவர்கள் தண்ணீர் வழங்கக் கோரி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   உதகையில் சேரிங்கிராஸ், கோத்தகிரி சாலையில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி உள்ளது. இவ்விடுதியில் அரசு கலைக் கல்லூரி மாணவர்களும், அரசு

  பாலிடெக்னிக் மாணவர்களுமாக 200-க்கும் மேற்பட்டோர் தங்கி படித்து வருகின்றனர்.

   இம்மாணவர்களுக்கு கடந்த சில வாரங்களாக முறையாக தண்ணீர் வழங்காததோடு, தரமான உணவும் வழங்கப்படவில்லை என மாணவர்கள் குற்றஞ்சாட்டி வந்தனர்.  குறிப்பாக, வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் விநியோகிக்கப்பட்டதால் மாணவர்கள் கடும் சிரமத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக, மாவட்ட ஆட்சியருக்கு பலமுறை கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டிருந்ததாம்.

   இந்நிலையில், கடந்த 2 நாள்களுக்கு முன் அருகில் உள்ள கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கச் சென்ற மாணவர் ஒருவர் கால் இடறி கிணற்றுக்குள் விழுந்து விட்டதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவங்களால் ஆத்திரமடைந்த மாணவர்கள் சனிக்கிழமை விடுதிக்கு எதிரே உள்ள சாலையில் காலி பக்கெட்டுகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   தகவலறிந்து, அப்பகுதிக்குச் சென்ற வருவாய்த்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் மாணவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai