சுடச்சுட

    

    குன்னூர் தபால் நிலையத்தில் மை ஸ்டாம்ப் திட்ட துவக்க விழா

    By குன்னூர்  |   Published on : 13th September 2015 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குன்னூர் தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் மை ஸ்டாம்ப் திட்ட துவக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.

     நிகழ்ச்சிக்கு, நீலகிரி கோட்ட தபால் கண்காணிப்பாளர் அருணாசலம் கணேஷ் தலைமை வகித்தார். குன்னூர் தலைமை தபால் அதிகாரி சுப்பிரமணி முன்னிலை வகித்தார். உதவி கோட்ட கண்காணிப்பாளர் அசோக்குமார் வரவேற்றார்.

     சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற கோவை போஸ்ட் மாஸ்டர் ஜென்ரல் மஞ்சு பிள்ளை தபால் தலைகளை வெளியிட்டுப் பேசியதாவது:

     பொதுமக்கள், மாணவர்கள், பொதுநல அமைப்புகள் தங்களுடைய புகைப்படங்கள், தங்களுக்கு பிடித்தமான லோகோவை தயார் செய்து ரூ. 300 கட்டணம் செலுத்தினால் ரூ. 5 மதிப்பிலான தபால் தலைகள் அச்சிடப்பட்டு வழங்கப்படும். இன்றைய தினம் குன்னூரில் மட்டும் 108 பேர்களின் தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன.

     குறிப்பாக, பள்ளி மாணவ, மாணவிகள், தனியார் நிறுவனத்தைச் சேர்ந்தோர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் தபால் ஊழியர்களும் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். மலை மாவட்டத்தில் இதற்கு அதிக வரவேற்பு உள்ளதால் இதனை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கூறினார்.

     இதில், கிங்கிட்ஸ் பள்ளி முதல்வர் டேவிட், கதிர்வேல் நாகாம்மாள் அறக்கட்டளை இயக்குநர் மாயகிருஷ்ணணன், வித்ரா குரூப் இயக்குநர் அமர்சந்த், கோவை மண்டல தபால் துறை விற்பனை அதிகாரிகள் ஜவஹர், சிவகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai