சுடச்சுட

    

    குன்னூர் அருகே மேலூர் ஊராட்சிக்கு உள்பட்ட அறையட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது.

    கருத்தரங்குக்கு, மேலூர் ஒசட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார அலுவலர் ஜெயராஜ் தலைமை வகித்தார். கிராம செவிலியர் கௌசல்யா முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியர் பிரேமா வரவேற்றார்.

     கருத்தரங்கில், டெங்கு காய்ச்சலைத் தடுப்பது குறித்தும், தன்சுத்தம், உடல் ஆரோக்கியம், கை கழுவும் முறைகள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது. இதில், பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். தமிழாசியர் கற்பகம் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai