சுடச்சுட

    

    கோத்தகிரியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில், தெரு முனைப் பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.

     பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பிரசாரத்திற்கு, நீலகிரி மாவட்ட சிறு விவசாயிகள் நலச்சங்கத் தலைவர் எ.பெள்ளி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜுபெள்ளி, ஜெயராமன், ஆல்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலச் செயலர் துரை மாணிக்கம், பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக ரூ. 30 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பிரச்னைகள் குறித்துப் பேசினார்.

     மேலும், இந்தப் பிரசார இயக்கம் கோத்தகிரியில் துவங்கி மாவட்டந்தோறும் சென்று, செப்டம்பர் 17-ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் மாநாட்டில் நிறைவடையும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai