Enable Javscript for better performance
தொரப்பள்ளி - கக்கநல்லா சாலையை சீரமைக்க கோரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    தொரப்பள்ளி - கக்கநல்லா சாலையை சீரமைக்க கோரிக்கை

    By கூடலூர்  |   Published on : 13th September 2015 08:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொரப்பள்ளி - கக்கநல்லா சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேட்டுப்பாளையத்திலிருந்து மைசூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையான முதுமலை புலிகள் காப்பக பகுதியில் உள்ள சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாக மாறியுள்ளன. இதனால், அவ்வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகின்றனர். மேலும், தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களையும் இணைக்கும் சாலையாக இருப்பதால் சுற்றுலா உள்பட வெளிமாநிலப் போக்குவரத்து அதிகமாக இப்பகுதியில் உள்ளது. எனவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai