சுடச்சுட

    

    2-ஆவது சீசனுக்குத் தயாராகும் உதகை அரசினர் தாவரவியல் பூங்கா

    By உதகை  |   Published on : 13th September 2015 08:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உதகையில் தொடங்கவுள்ள இரண்டாவது கோடை சீசனுக்காக  அரசினர் தாவரவியல் பூங்கா தயாராகி வருகிறது.

     இதன் தொடக்கமாக, தாவரவியல் பூங்காவில் தொட்டிகளில் வளர்க்கப்பட்டிருந்த 7,000-க்கும் அதிகமான மலர்ச்செடிகளை காட்சி மாடத்தில் அடுக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

     உதகையில் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் இரண்டாவது சீசன் மாதங்களாகும். தென்மேற்கு பருவமழைக்காலம் முடிவுக்கு வந்து பனிக்காலம் தொடங்குவதற்கு முன்பான காலத்தை இரண்டாவது சீசன் காலம் என அழைக்கின்றனர்.

     இக்காலத்தில் வெளிமாநில, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை உதகையில் அதிகளவில் இருக்கும். வழக்கமாக 2-ஆவது சீசனில் 5 லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம்.

     தற்போது, இரண்டாவது சீசன் தொடங்கியுள்ள நிலையில் அரசினர் தாவரவியல் பூங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. பூங்காவில் சுமார் 3 லட்சம் மலர்ச் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai