சுடச்சுட

    

    அபாய நிலையில் உள்ள மரங்களை அகற்றக் கோரிக்கை

    By கோத்தகிரி,  |   Published on : 14th September 2015 03:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோத்தகிரியை அடுத்த குண்டாடா ஊராட்சி நடுநிலைப் பள்ளி கட்டடம் மீது விழும் நிலையில் உள்ள மரத்தை அகற்றக் கோரி, பள்ளித் தலைமையாசிரியர் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.

    இதுகுறித்து, தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன், ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு:

    குண்டாடா பகுதியில் மூடும் தருவாயில் இருந்த ஊராட்சி நடுநிலைப் பள்ளியை சில ஆசிரியர்கள், பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள், தன்னார்வர்களைக் கொண்டு மீண்டும் தரம் உயர்த்தி நடத்தி வருகின்றோம். இந்நிலையில், பள்ளியின் அருகாமையில் உள்ள அபாயகரமான மரங்கள் பள்ளிக் கட்டடத்தின் மேல் விழும் நிலையில் உள்ளன. இதுகுறித்து, ஏற்கெனவே கோட்டாட்சியர், மாவட்ட வன அலுவலருக்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, மாவட்ட ஆட்சியர் இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, ஆபத்தான மரங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai