கோத்தகிரியில் ஆரோக்கிய மாதா திருவிழா
By கோத்தகிரி, | Published on : 14th September 2015 03:15 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
கோத்தகிரி ஆரோக்கிய மாதா கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும், செப்டம்பர் இரண்டாம் வார ஞாயிற்றுக்கிழமையில் கோத்தகிரி ஆரோக்கிய மாதா திருவிழா நடைபெறும். அதேபோல, நடப்பாண்டில் 13-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு பங்குத் தந்தை ரொசாரியோ தலைமையில் சிறப்பு திருப்பலியுடன் திருவிழா துவங்கியது.
அதைத்தொடர்ந்து, காலை 7.30-க்கு ஆயர் அ.அமல்ராஜ் தலைமையில், தமிழ் சிறப்புத் திருப்பலியும், 9 மணிக்கு ஆடம்பர கூட்டு பால் திருப்பலியும், தேர் பவனியும் நடைபெற்றது.
மாலை 4.30-க்கு நடைபெற்ற ஜெபமாலை திருப்பலியைத் தொடர்ந்து, 6.30 மணிக்கு அருள்பணி சகாய் தலைமையில், அன்னையின் தேர்பவனி துவங்கியது. தேர்பவனியானது பேருந்து நிலையம், பஜார், காம்பாய் கடைவீதி, மார்க்கெட், ராம்சந்த் வழியாகச் சென்று மீண்டும் ஆலயத்தில் நிறைவடைந்தது.
இதில், கோவை, மேட்டுப்பாளயம், உதகை, குன்னூர், கூடலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து திரளான மக்கள் கலந்துகொண்டனர்.