சுடச்சுட

    

    "சிம்ஸ் பூங்காவில் விரைவில் படகு சவாரி தொடங்கப்படும்'

    By குன்னூர்,  |   Published on : 14th September 2015 03:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குன்னூர், சிம்ஸ் பூங்கா படகு இல்லப் பணிகள் அக்டோபர் மாதத்துக்குள் முடிவடைந்து விரைவில் படகு சவாரி துவங்கும் என்று தோட்டக்கலை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

    நீலகிரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களில் சிம்ஸ் பூங்காவும் ஒன்று. இங்குள்ள படகு இல்லத்தில் பயணிக்க சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்தப் படகு இல்லத்தில் அதிக அளவு சேறும் சகதியும் நிறைந்ததால், இதைச் சீரமைக்கவும், தடுப்புச்சுவர்கள் அமைக்கும் பணிகளும் கடந்த ஏப்ரல் மாதம் துவங்கியது. சுமார் 48 லட்சம் செலவில் படகு இல்லத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவதால் படகு சவாரி செய்ய முடியாமல் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இதைக் கருத்தில் கொண்டு படகு இல்லத்தில் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இப்பணிகள் வரும் அக்டோபர் மாதத்துக்குள் முடிவடைந்து படகுப் போக்குவரத்து துவங்கும் என தோட்டக்கலை இணை இயக்குநர் ராம்சுந்தர் தெரிவித்துள்ளார்.

     

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai