சுடச்சுட

    

    உதகையில் செப்டம்பர் 19, 20 ஆகிய இரு நாள்களில் விநாயகர் விசர்ஜன ஊர்வலங்கள் நடைபெறவுள்ளன.

    இதையொட்டி, இந்து சேவா சங்கம் அமைப்பின் சார்பில் செப்டம்பர் 15-ஆம் தேதி 62 சிலைகள் வைக்கப்படுகின்றன. இச்சிலைகள் ஊர்வலம் 19-ஆம் தேதி (சனிக்கிழமை) காலையில் காந்தல் முக்கோணம் பகுதியிலிருந்து புறப்பட்டு சாண்டிநள்ளா பகுதியில் நிறைவடைகிறது. பின்னர், அங்குள்ள நீர்த்தேக்கத்தில் அனைத்து விநாயகர் சிலைகளும் விசர்ஜனம் செய்யப்படவுள்ளது.

    அதேபோல, இந்து முன்னணி அமைப்பின் சார்பில் 17-ஆம் தேதி 50 சிலைகள் வைக்கப்படுகின்றன. இச்சிலைகள் ஊர்வலம் 20-ஆம் தேதி காந்தல் பகுதியிலிருந்து புறப்பட்டு சாண்டிநள்ளா நீர்த்தேக்கத்தில் விசர்ஜனம் செய்யப்படுகிறது.

    உதகையில் இரண்டு நாள்கள் நடைபெறவுள்ள விநாயகர் விசர்ஜன ஊர்வலத்தையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai