சுடச்சுட

  

  டேன்டீ நிறுவனத்தை புனரமைத்து பாதுகாக்க தமிழக அரசு ரூ. 100 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என நீலகிரி எஸ்டேட் ஒர்க்கர்ஸ் யூனியன் கோரிக்கை விடுத்துள்ளது.

  இச்சங்கத்தின் மாவட்ட மாநாடு அதன் தலைவர் காந்தி தலைமையில் பந்தலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அகில இந்திய தோட்ட சங்கத் தலைவர் லாலாஜி பாபு துவக்க உரையாற்றினார். சங்கப் பொதுச்செயலர் எம்.ஆர்.சுரேஷ் ஆண்டறிக்கையையும், பொருளாளர் ரமேஷ் நிதி அறிக்கையையும் சமர்ப்பித்தனர்.

  இம்மாநாட்டில், நீலகிரி மாவட்டத்தில் வனவிலங்குகளால் தாக்கப்பட்டு உயிரிழப்போரின் குடும்பத்துக்கு நிவாரணத் தொகையாக ரூ. 10 லட்சம் வழங்குவதோடு, அரசு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும். தமிழக அரசுக்கு சொந்தமான டேன்டீ நிறுவனத்தை புனரமைத்து பாதுகாக்க தமிழக அரசு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

  கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக குன்னூரில் இயங்கிவரும் தேயிலைக் கிடங்குகளை கோவை மாவட்டம், காரமடை பகுதிக்கு இடமாற்றும் முயற்சியை கைவிட வேண்டும். தோட்டத் தொழிலாளர் சட்டங்களை திருத்தக்கூடாது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. கௌரவ தலைவராக என்.வாசு, தலைவராக ரமேஷ், பொதுச் செயலராக எம்.ஆர்.சுரேஷ், பொருளாளராக மாறன் உள்ளிட்ட

  45 பேர் கமிட்டி உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலர் ஆர்.பத்ரி, சிஐடியு மாவட்டச் செயலர் ஆல்துரை,

  தோட்ட சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் குமார், மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலர் சுப்பிரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  முன்னதாக மாநாட்டையொட்டி தொழிலாளர் பேரணி நடைபெற்றது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai