சுடச்சுட

  

  மர்ம நபர்கள் தாக்கியதில் விவசாயிகள் இருவர் காயம்

  By அன்னூர்,  |   Published on : 14th September 2015 03:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அன்னூர் அருகே ஆடு திருட முயன்ற மர்ம நபர்கள் தாக்கியதில் இரு விவசாயிகள் காயமடைந்தனர்.

  அன்னூர் கணுவக்கரையைச் சேர்ந்த கேசவன் என்பவரது தோட்டத்தில் சூலூரைச் சேர்ந்த ரங்கநாதன் என்பவர் ஆட்டுப் பட்டி அமைத்துள்ளார்.

  இந்நிலையில், ஆட்டுப் பட்டிக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த 8 பேர் கொண்ட கும்பல் ஆடு விலை கேட்பது போல் நடித்துள்ளனர். பின்னர், ரங்கநாதனை கட்டிப் போட்டு விட்டு ஆடுகளைத் திருட முயற்சித்துள்ளனர்.

  அப்போது, ரங்கநாதனின் சத்தம் கேட்டு பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த பொன்னுச்சாமி, வெள்ளிங்கிரி, அரவிந்தன் ஆகியோர் அங்கு வந்துள்ளனர். அந்த மர்மக் கும்பல் அவர்கள் மீது கல் வீசி தாக்கியுள்ளது.

  இதையறிந்த, பக்கத்துக்கு தோட்டத்தைச் சேர்ந்த விவசாயி வேலுசாமி என்பவர் உரிமத்துடன் வைத்திருந்த துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டுள்ளார். ஆனால், அந்தக் கும்பல் அவரையும் தாக்க வந்துள்ளனர்.

  இதையடுத்து, வேலுச்சாமி மர்ம நபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதையடுத்து அவர்கள் தப்பியோடினர். மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில் பொன்னுசாமி, வெள்ளிங்கிரி காயமடைந்தனர். இதுகுறித்து அன்னூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai