சுடச்சுட

    

    மருத்துவக் கல்லூரிக்கான கல்விக் கட்டணத்தை கட்ட வழியின்றி தவித்த பழங்குடியின மாணவருக்கு மாவட்ட ஆட்சியர் பி.சங்கரின் முயற்சியால் கனரா வங்கியின் மூலம் ரூ. 7.5 லட்சம் கல்விக் கடனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

     உதகை அருகே உள்ள மாயார் பகுதியைச் சேர்ந்தவர் சி.மணிகண்டன். இவர், பிளஸ் 2 தேர்வில் 1,074 மதிப்பெண்கள் பெற்றதையடுத்து, இவருக்கு இலவச கல்வி அளிப்பதாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது.

    இதையடுத்து அவர் அக்கல்லூரியில் சேர்ந்துள்ளார்.

     இதனிடையே, அம்மாணவருக்கு இலவச கல்வி அளித்து வந்த கல்லூரி நிர்வாகம் திடீரென அதை மறுத்து கல்வி கட்டணத்தை முழுமையாக கட்ட வேண்டும் என தெரிவித்தது. இதையடுத்து கல்வி தடைபடும் நிலையில் இருந்த அம்மாணவர், இதுதொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கரிடம் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கோரிக்கை மனு அளித்திருந்தார். இம்மனுவை பரிசீலித்த ஆட்சியர், அம்மாணவருக்கு கல்விக் கட்டணத்திற்கான நிதியுதவி கிடைக்க நடவடிக்கை எடுத்தார். அதன்படி, அம்மாணவர் மருத்துவக் கல்வியை தொடர ரூ. 7.5 லட்சம் கல்விக் கடனாக அளிக்க கனரா வங்கி முன்வந்துள்ளது. மீதமுள்ள தொகைக்கு நீலகிரி ஆதிவாசிகள் நல சங்கம் பொறுப்பேற்றுள்ளது.

      இந்நிலையில், மாணவர் மணிகண்டனுக்கு 3-ஆம் ஆண்டுக்கான கல்வி உதவித் தொகையாக ரூ. 3 லட்சத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் உதகையில் திங்கள்கிழமை வழங்கினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் சுந்தரபாரதி, கனரா வங்கி மேலாளர் சங்கரா ஆகியோர் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai