Enable Javscript for better performance
கோத்தகிரியில் குடிநீர் கிணறு திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோத்தகிரியில் மலைப்பகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் கிணறு திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

     கோத்தகிரி பேரூராட்சி, 6-ஆவது வார்டு பெரியார் நகரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, பேரூராட்சித் தலைவர் சை.வாப்பு தலைமை வகித்தார். கவுன்சிலர் கே.ஏ.பி.சீனிவாசன், குன்னூர் தொகுதிச் செயலர் கே.கே.மாதன், ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் சாந்தி ராமு, ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச் செயலர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

     மக்களவை உறுப்பினர் கோபாலகிருஷ்ணன், தாட்கோ தலைவர் எம்.கலைச்செல்வன் ஆகியோர் குடிநீர் கிணற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.

     இதில், ஜெயலலிதா பேரவை ஒன்றியத் தலைவர் கே.பி.ராமு, ஹிரியோடையா கூட்டுறவு வங்கித் தலைவர் சிவாஜி, சிறுபான்மை ஒன்றியத் தலைவர் கே.கபீர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai