Enable Javscript for better performance
முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் அட்டகாசம்- Dinamani

சுடச்சுட

    

    முதுமலை புலிகள் காப்பகத்தில் யானைகள் அட்டகாசம்

    By கூடலூர்  |   Published on : 15th September 2015 06:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா வாகனங்களை யானைகள் கூட்டம் திங்கள்கிழமை விரட்டியதால் சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சிக்குள்ளாகினர்.

     முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு - மசினகுடி சாலையோரம் 15 யானைகள் அடங்கிய கூட்டம் திங்கள்கிழமை முகாமிட்டிருந்தன.

     அப்போது, அவ்வழியாகச் சென்ற சுற்றுலா வாகனத்தை ஒரு யானை விரட்ட ஆரம்பித்ததது. இதையடுத்து, மற்ற யானைகளும் தொடர்ந்து வந்த வாகனங்களை விரட்ட ஆரம்பித்தன. இதனால், சுற்றுலாப் பயணிகளும், வாகன ஓட்டிகளும் அதிர்ச்சிக்குள்ளாகினர். நீண்ட நேரத்திற்குப் பிறகு யானைகள் வனப்பகுதிக்குள் சென்றன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai