சுடச்சுட

    

    விமான பயணக் கட்டணம்: முக்கிய முடிவு எடுக்கப்படும்: மத்திய விமான போக்குவரத்து அமைச்சர் தகவல்

    By உதகை  |   Published on : 15th September 2015 06:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விமான பயணக் கட்டணம் தொடர்பாக தில்லியில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக, மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக் பசுபதி ராஜூ கஜபதி தெரிவித்தார்.

     உதகையில் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை அவர் தெரிவித்ததாவது:

     விமான சேவையில் பயணிகளின் கட்டணங்கள் தற்போது வெகுவாக மாறுபடுகின்றன. கட்டணங்கள் மிகக் குறைந்த அளவுக்கும் உள்ளன. இதுதொடர்பாக, அனைத்து விமான சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளாக ஏர் இந்தியா விமானக் கட்டணத்தில் பெரிதாக மாற்றம் செய்யப்படவில்லை. இருப்பினும், ஏர் இந்தியா நிறுவனம் நஷ்டத்திலேயே இயங்குகிறது. ஆனாலும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள நிறுவனமாக ஏர் இந்தியா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை புனரமைத்து அதற்கு

    தேவையான நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

     உத்தரகாண்ட் போன்ற மலைப்பகுதிகளில் தனியார் ஹெலிகாப்டர்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதேபோல, மேற்கு வங்கத்திலும் தனியார் நிறுவனத்தின் சார்பில் ஹெலிகாப்டர்கள் இயங்குகின்றன. ஆனாலும் இச்சேவைக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களிலும் அம்மாநில அரசுகளே முழு பொறுப்பேற்க வேண்டும்.

     தமிழக அரசும் இத்தகைய பொறுப்பை ஏற்க முன் வந்தால் உதகையில் ஹெலிகாப்டர் சேவை தொடங்குவதற்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் எத்தகைய தடையும் விதிக்காது. மாநில அரசின் முயற்சிகளுக்கு மத்திய அரசு முழு ஆதரவளிக்கும்.

     தனியார் விமான சேவைகளாலும், கட்டணங்கள் குறைந்திருப்பதாலும் அதிகளவிலான பயணிகள் விமான பயணத்தை மேற்கொள்கின்றனர். இதனால், சுற்றுலாத் தொழில் மேம்படுவதோடு, மக்களின் பொருளாதாரமும் உயர்கிறது. தற்போதைய நிலையில் ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திற்கு எவ்வித இடையூறுமில்லை. கிங்பிஷர் நிறுவனம்தான் மீள முடியாத சிக்கலில் உள்ளது.

     விமானத்தில் பணியாற்றும் பணிப் பெண்கள் தங்கள் உடல் நலத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். அவர்களது சேவை உடல் நலத்தைக் குறித்ததே என்பதால் அதில் எத்தகைய சலுகையையும் காட்ட முடியாது என தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai