சுடச்சுட

    

    சகாயத்தின் முயற்சிகளுக்கு தேமுதிக துணை நிற்கும்: விஜயகாந்த் பேச்சு

    By உதகை  |   Published on : 16th September 2015 02:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நடத்தி வரும் விசாரணைக்கும், இப்பிரச்னை தொடர்பாக அவர் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தேமுதிக துணை நிற்கும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

     நீலகிரி மாவட்ட தேமுதிக சார்பில் மக்களுக்காக மக்கள் பணி நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி குன்னூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜயகாந்த் பேசியதாவது:

     என் மீது போடப்படும் வழக்குகளுக்காக நான் அஞ்சமாட்டேன். ஆனால், தமிழக காவல் துறை டாஸ்மாக் காவல் துறையாக மாறிவிட்டது.

     தமிழக சட்டப்பேரவை நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப அனைத்து தொலைக்காட்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நான் சட்டப்பேரவைக்குள் செல்வேன். ஆனால், என்னுடைய கையெழுத்தை வேறு யாராவது போட்டு விடுவார்களோ என்பதற்காகத்தான் சட்டப்பேரவைக்கு சென்று கையெழுத்திட்டு விட்டு, நான் உள்ளே பேச வேண்டியவற்றை வெளியே பேசி வருகிறேன்.

     கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நடத்தி வரும் விசாரணைகளுக்கும், இதுதொடர்பாக அவர் எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் தேமுதிக துணை நிற்கும். அவர் எலும்புக் கூடுகளை வெளியே எடுத்த பின்னர் அந்த எலும்புக் கூடுகளுக்கு உறவினர்கள் எனக் கூறிச் சிலர் சொந்தம் கொண்டாடுவது உள்நோக்கமுடையதாகும்.

     2016-இல் தெய்வத்தின் அருளாலும், ஆசியாலும் தேமுதிக தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கும். தெய்வம் என்பது மக்கள்தான் என்றார்.

     முன்னதாக கட்சியின் மகளிரணித் தலைவர் பிரேமலதா பேசுகையில், "தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் ஊழல் மலிந்து விட்டது. நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு கட்டுபடியான விலை வழங்கப்படவில்லை. மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் செய்து தரப்படாததுடன், மூன்றாவது மாற்றுப்பாதை திட்டம் என்பதையும் அதிமுக அரசு மறந்தே விட்டது' என்றார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai