Enable Javscript for better performance
பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆதார் அட்டைப் பதிவு தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆதார் அட்டைப் பதிவு தொடக்கம்

    By உதகை  |   Published on : 16th September 2015 02:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உதகையில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஆதார் அட்டை பதிவு தொடங்கியது.

     உதகை அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இம்முகாமை மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

     நீலகிரி மாவட்டத்தில் 1 லட்சத்து 19 ஆயிரத்து 744 மாணவ, மாணவிகள் உள்ளனர். இவர்களில் 47 ஆயிரத்து 802 மாணவ, மாணவிகள் ஏற்கெனவே ஆதார் அட்டை பெற்றுள்ளனர். 15 ஆயிரத்து 541 பேர் ஆதார் அட்டை கோரி விண்ணப்பித்துள்ளனர்.

     மீதமுள்ள 56 ஆயிரத்து 401 மாணவர்களுக்கு ஆதார் அட்டைக்கான புகைப்படம் எடுக்க வேண்டும். எனவே, இத்தகைய மாணவர்களுக்கான சிறப்பு முகாம் நீலகிரி மாவட்டத்தில் முதல்கட்டமாக 4 பள்ளிகளில் செப்டம்பர் 15 முதல் 22-ஆம் தேதி வரை நடத்தப்படுகிறது.

     அதன்படி, உதகையில் அரசு மேல்நிலைப் பள்ளி, அனிக்கொரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, குன்னூர் வண்டிச்சோலை நகராட்சி நடுநிலைப் பள்ளி, குன்னூர் காந்திபுரம் நகராட்சி நடுநிலைப் பள்ளி ஆகியவற்றில் செயல்படுத்தப்படுகிறது.

     தொடர்ந்து, இத்திட்டம் அனைத்து பள்ளிகளிலும் உள்ள 45 குறு வள மையங்களில் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 15 ஆம் தேதி வரை விரிவுபடுத்தப்படும்.

     எனவே, ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுக்காத மாணவ, மாணவிகள் இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

     இந்நிகழ்ச்சியில், உதகை வருவாய்க் கோட்டாட்சியர் கார்த்திகேயன், முதன்மைக் கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி, உதகை வட்டாட்சியர் குமாரராஜா, அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் சாமுவேல் பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai