சுடச்சுட

  

  "களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும்'

  By உதகை  |   Published on : 17th September 2015 06:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விநாயகர் சதுர்த்தியையொட்டி, கரைக்கப்படும் சிலைகளில் களி மண்ணால் செய்யப்பட்ட சிலைகளை மட்டுமே நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என நீலகிரி மாவட்ட ஆட்சியர் பி.சங்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.

  இதுதொடர்பாக, ஆட்சியர் தெரிவித்துள்ளதாவது:

  விநாயகர் சதுர்த்தியின்போது, களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை பூஜித்த பிறகு நீர்நிலைகளில் கரைக்கும் வழக்கம் உள்ளது. ஆனால், அண்மை காலமாக ரசாயன வண்ணப் பூச்சுகளுடன் கூடிய விநாயகர் சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதால் நீர்நிலைகள் மாசுபடும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

  ரசாயன வர்ணங்களில் இருக்கும் காரீயம், துத்தநாகம் போன்ற உலோகங்களால் நீர்நிலைகள் மாசுபடுவதுடன், நீர்நிலைகளில் வாழும் உயிரினங்களும், அந்நீரைப் பயன்படுத்தும் பொதுமக்களுக்கும், கால்நடைகளுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

   எனவே, ரசாயன வர்ணம் பூசப்பட்ட விநாயகர் சிலைகளை நீர் நிலைகளில் கரைப்பதைத் தவிர்க்க வேண்டும்.

  நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் லாஸ் நீர்வீழ்ச்சி, உதகையில் காமராஜர் சாகர் அணை, கூடலூரில் இரும்புப்பாலம் ஆறு, கனியல் ஆறு, பந்தலூரில் பொன்னானி ஆறு, கோத்தகிரியில் உயிலட்டி நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai