சுடச்சுட

    

    கிரானைட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை: விஜயகாந்த் பேட்டி

    By உதகை  |   Published on : 17th September 2015 06:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கிரானைட் முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை தேவையென தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறினார்.

    இதுகுறித்து, உதகையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் கூறியதாவது:

    கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்து விடாததால் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்னையில் இரு மாநில அரசுகளும் விவசாயிகள் குறித்து கவலைப்படாமல் அரசியல் செய்கின்றன.

    கிரானைட் முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் நடத்திவரும் விசாரணை சுதந்திரமாக நடைபெறவில்லை. இதற்கு ஆளுங்கட்சியே இடையூறாக இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, கிரானைட் முறைகேடு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றவேண்டும்.

    வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேசுவதற்கு கால அவகாசம் உள்ளது. சென்னையில் நடத்தப்பட்ட தொழில் முதலீட்டாளர் மாநாடு வெற்றியடைந்துள்ளதா என்பது குறித்து 6 மாதங்களுக்குப் பின்னரே தெரியவரும்.

    தமிழக மீனவர்களுக்கு தற்போது பிரச்னை இருப்பதாகத் தெரியவில்லை. இருப்பினும் பிரதமர் மோடி, ரணில் விக்கிரமசிங்கேயுடனான தில்லி பேச்சுவார்த்தைக்குப் பின்னர், சுமுகத் தீர்வு ஏற்படும் என நம்பலாம். உதகை படகு இல்லம் மட்டுமல்லாமல் தமிழகத்திலுள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களுமே மோசமாகத்தான் உள்ளன என்றார்.

    இப்பேட்டியின்போது, கட்சியின் மகளிரணித் தலைவர் பிரேமலதா விஜயகாந்த மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai