சுடச்சுட

  

  சுமைப் பணித் தொழிலாளர்கள் 3-ஆவது நாளாக வேலை நிறுத்தம்: ரூ. 4 கோடி தேயிலைத் தூள் தேக்கம்

  By குன்னூர்  |   Published on : 17th September 2015 06:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சுமைப் பணித் தொழிலாளர்களின் 3-ஆவது நாள் வேலை நிறுத்தம் காரணமாக ரூ. 4 கோடி மதிப்பிலான தேயிலைத் தூள் தேக்கமடைந்துள்ளது.

  எஸ்டேட் நிர்வாகத்தினர் குன்னூரில் உள்ள தோயிலை கிடங்குகளை மேட்டுப்பாளையம், காரமடை போன்ற சமவெளிப் பகுதிகளுக்கு மாற்றி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேயிலை சுமைப் பணித் தொழிலாளர்கள் கடந்த 3 நாள்களாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  இதன் காரணமாக குன்னூர் பகுதியில் உள்ள தேயிலை தூள் கிடங்குளில் ரூ. 4 கோடி மதிப்பிலான தேயிலைத் தூள் தேக்கமடைந்துள்ளது.

  நீலகிரியில் உற்பத்தி ஆகும் தேயிலைகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சந்தைபடுத்தப் படுகின்றன. அதுமட்டுமின்றி வெளிநாடுகளான ரஷ்யா, ஈரான், ஈராக், எகிப்து, பாகிஸ்தான், உள்பட பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

  இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணாவிட்டால் தேயிலைத் தொழில் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்படும் எனத் தேயிலை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

  இந்நிலையில், வருவாய்க் கோட்டாட்சியர் பழனிகுமார் தலைமையில் புதன்கிழமை மாலையில் சுமைப் பணித் தொழிலாளர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

  இதையடுத்து, ஏல மைய நிர்வாகிகள், தேயிலைத் தொழிற்சாலை நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் எனக் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai