சுடச்சுட

  

  தனியார் வாகனங்களால் அரசுப் பேருந்து ஒட்டுநர்கள் அவதி

  By குன்னூர்  |   Published on : 17th September 2015 06:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குன்னூர் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்படும் தனியார் வாகனங்களால் அரசுப் பேருந்து ஒட்டுநர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

  குன்னூர் பேருந்து நிலையம் மிகவும் குறுகலாக உள்ளது. இதனால், அப்பகுதியில் வாகன நெரிசல் மிகுந்திருக்கும். மேலும், குன்னூரில் இருந்து கோத்தகிரி செல்லும் முக்கியச் சாலையாகவும் பேருந்து நிலையப் பகுதி இருப்பதால் இங்கிருந்து கிராமப் பகுதிகளுக்குச் செல்லும் அரசுப் பேருந்துகள் மட்மின்றி சிற்றுந்துகளும் அதிகளவில் வந்து செல்கின்றன.

  இதனால், பேருந்து நிலையப் பகுதியில் அதிகரித்து வரும் நெரிசல் காரணமாக பேருந்துகளில் இடம் பிடிக்கச் செல்லும் பயணிகள் அவ்வப்போது விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.

  பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் கடந்த சில நாள்களாக 2, 4 சக்கர வாகனங்களும் நிறுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பேருந்து ஓட்டுநர்கள் சாலையோரத்தில் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்கின்றனர்.

  இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. ஏற்கெனவே, அரசு, தனியார் சிற்றுந்துகள் பயணிகளை இறக்கி, ஏற்றிச் செல்ல போதிய இடவசதி இல்லாததால் ஓட்டுநர்கள் அவதியுற்று வரும் நிலையில் பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

  எனவே, போக்குவரத்துக் காவல் துறையினர் இதுகுறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai