சுடச்சுட

    

    உதகை, சேரிங்கிராஸில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் மதி அங்காடியை மாவட்ட ஆட்சியர் புதன்கிழமை திறந்து வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில், பங்கேற்ற ஆட்சியர் பி.சங்கர் பேசியதாவது:

    தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், மகளிர் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை சந்தைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் மக்கள் அதிகளவில் வந்து செல்லும்,  விற்பனை வாய்ப்பு அதிகம் உள்ள இடங்களைத் தேர்வு செய்து மதி அங்காடி என்ற பெயரில் விற்பனை அங்காடிகளை அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த மதி விற்பனை அங்காடி, உதகை ஊராட்சி ஒன்றியத்தில் தொட்டபெட்டா ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் மூலமாக டான்சி நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.

    ஒரு மதி விற்பனை அங்காடி அமைப்பதற்கு ரூ. 5 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ. 4 லட்சம் மதி அங்காடி அமைப்பதற்கும், ரூ. 1 லட்சம் பொருள்களை கொள்முதல் செய்வதற்குமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    நீலகிரி மாவட்டத்தில் செயல்படும் மகளிர், ஆண்கள், மாற்றுத்திறனாளிகள் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு, தமிழக முதல்வரின் அறிவுரையின்படி நடப்பாண்டில் இதுவரை ரூ. 36 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai