சுடச்சுட

    

    மேலூர் ஊராட்சியில் சாலை அமைக்கும் பணியைத் தொடர பொதுமக்கள் வலியுறுத்தல்

    By குன்னூர்  |   Published on : 17th September 2015 06:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குன்னூர் அருகே உள்ள மேலூர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சாலை அமைக்கும் பணியை மீண்டும் துவங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலூர் ஊராட்சிக்கு உள்பட்ட டெராமியா, கெரடாலீஸ் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரத்திற்கும் மேற்ட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பினரும் தங்களின் அனைத்து தேவைகளுக்கும் சுமார் 2 கி.மீ. தூரமுள்ள தூதூர்மட்டத்திற்கு தான் வந்து, செல்லவேண்டும்.

    இந்நிலையில், தூதூர்மட்டம் முதல் கெரடாலீஸ் வரை நடைபாதை அமைக்கப்பட்டது. இந்த நடைபாதை மிகவும் குறுகியதாக இருப்பதால் நோய்வாய்ப்பட்டவர்களை தொட்டில் கட்டி தூக்கிச் செல்லும் நிலை ஏற்பட்டது. இதனால், குறித்த நேரத்திற்கு நோயாளிகள் மருத்துவமனைக்குச் செல்ல முடியாமல் உயிரிழப்புகள் ஏற்பட்டன. எனவே, அந்த நடைபாதையை அகலப்படுத்தி வாகனங்கள் செல்லும் வகையில் தார்ச்சாலையாக மாற்றி அமைக்கவேண்டும் எனப் பலமுறை இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து, ரூ. 40 லட்சம் மதிப்பில் நடைபாதையை அகலப்படுத்தி தார்ச்சாலை அமைக்கும் பணி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் துவங்கப்பட்டது. ஆனால், இது வரை பணி முடிவடையவில்லை. மேலும், சாலை அமைத்த இடங்களில் கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கததால் கழிவுநீர் சாலையில் குளம்போல தேங்கி நிற்கிறது.

    இதனால், பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகள் பகல் நேரத்திலேயே கடும்சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக மீண்டும் சாலை அமைக்கும் பணியை  துவங்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai