சுடச்சுட

  

  அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் விநாயகர் தேர் வெள்ளோட்டம்

  By அன்னூர்,  |   Published on : 18th September 2015 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அன்னூர் மன்னீஸ்வரர் கோயிலில் புதிதாக செய்யப்பட்ட விநாயகர் தேர் வெள்ளோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

  இக்கோயிலுக்கு திருமுருகன் அருள்நெறிக் கழகம் மற்றும் ஊர்ப் பொதுமக்கள் சார்பில் கடந்த 2000-ஆம் ஆண்டு புதிதாகத் தேர் செய்யப்பட்டு, ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. தேர் திருவிழாவின்போது, விநாயகர் தேர் இல்லாததால் சப்பரத்தில் விநாயகர் எழுந்தருளி வந்தார்.

  இந்நிலையில், திருமுருகன் அருள்நெறிக் கழகம், ஊர்ப் பொதுமக்கள் சார்பில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக விநாயகர் தேர், சிற்ப வேலைப்பாடுகளுடன் உருவாக்கப்பட்டது.

  விநாயகர் சதுர்த்தி தினமான வியாழக்கிழமை காலை 11-00 மணியளவில் விநாயகர் தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், கெளமார மடம், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் இளைய பட்டம் மருதாசல அடிகளார் உள்ளிட்டோர் முன்னிலையில் இத்தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. இதில், திரளாக பக்தர்கள் பங்கேற்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai