சுடச்சுட

  

  குன்னூரில் ரூ. 2 கோடி மதிப்பிலான தேயிலைத் தூள் தேக்கம்

  By குன்னூர்,  |   Published on : 18th September 2015 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குன்னூரில் ரூ. 2 கோடி மதிப்பிலான தேயிலைத் தூள்கள் தேக்கமடைந்துள்ளன.

  குன்னூர் அரசு கூட்டுறவு தேயிலை ஏல மையத்தில் நடப்பாண்டுக்கான 37-ஆவது ஏலம் புதன்கிழமை நடைபெற்றது. இந்த ஏலத்தில் மொத்தம் 6 லட்சத்து 77 ஆயிரத்து 783 கிலோ தேயிலைத் தூள் விற்பனைக்கு வந்தது.

  இதில், இலை ரகம் 4 லட்சத்து 20 ஆயிரத்து 158 கிலோவும், டஸ்ட் ரகம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 525 கிலோவும் அடங்கும். இந்த ஏலத்தில் உள்நாடு, வெளிநாட்டு வர்த்தகர்கள் மட்டும் பங்கேற்று குறைந்த அளவிலான தேயிலைத் தூளை மட்டுமே கொள்முதல் செய்தனர்.

  வெளிநாட்டு வர்த்தகர்கள் பங்கேற்காததால் 50 சதவீத தேயிலைத் தூள் விற்பனை செய்யப்பட்டது. மேலும், அனைத்து ரகத்திற்கும் கிலோ ரூ. 2 வரை விலை சரிந்தது. கடந்த சில வாரங்களாக ஏல மையங்களில் விற்பனையாகும் தேயிலைத் தூளின் அளவு குறைந்து வருவதால் அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்துள்ளனர்.

  இந்த வார நிலவரப்படி இலை ரகத்தில் சாதாரண வகை கிலோ ரூ. 50 முதல் ரூ. 55 வரையும், உயர் வகை ரூ. 60 முதல் ரூ. 74 வரையும், டஸ்ட் ரகத்தில் சாதாரண வகை ரூ. 55 முதல் ரூ. 60 வரையும், உயர் வகை ரூ. 67 முதல் ரூ. 75 வரையும் விலை கிடைத்தது.

  இந்த வாரமும் ரூ. 2 கோடி மதிப்பிலான தேயிலைத் தூள் தேக்கமடைந்தது. வெளிநாட்டு வர்த்தகத்தைப் பொறுத்தவரை பாகிஸ்தான் வர்த்தகர்கள் குறைந்த அளவிலான தேயிலைத் தூளை மட்டுமே கொள்முதல் செய்தனர்.

  உள்நாட்டு வர்த்தகமும் எதிர்பார்த்தது போல் இல்லாததால் கூட்டுறவு ஏல மையத்தில் தேயிலைத் தூளின் விற்பனை தொடர்ந்து சரிந்து வருகிறது. இதன் காரணமாக பசுந்தேயிலை விவசாயிகள், உற்பத்தியாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai